Infolinks In Text Ads

Archive for July 2012

என் வீட்டு கண்ணாடி


என் வீட்டு கண்ணாடி

என் வீட்டு கண்ணாடியில்,
என் உருவம் தேட..
உன் முகம் காண்கிறேன்,
இது மந்திர கண்ணாடியா?
இல்லை,
ஒரு முறை உன்னை கண்டதனாலோ,
இவனும் என் போல,
உலகம் மறந்து விட்டான்,
கடமை தவறி விட்டான்..
நாளை,
ஜோடியாக நம்மை சுமக்கும் நாளில்,
கணம் தாங்காமல் உடைந்து போவானோ?

Leave a comment

tamil months

தமிழ் மாதங்கள்


தை பிறந்தால் வழி பிறக்கும் 
தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும்
மாசியில் மங்களம் சூடிடும் 
புது வரவுகள் பொங்கிடும் 
பங்குனியில் ஊரெங்கும் திருவிழா 
தெருவெங்கும் தேரோட்டம் 
சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க  
சித்திரை விழாக்கள் கோலாகலமாகும்
வைகாசியில் வைபோகம் கன்னியரும் காளையரும்
மணமாலைகள் சூடிட மங்களமாகிடும்
ஆனியில் உச்சிவெயில் தணியும் 
ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும்
 
ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும் 
உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் 
ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும் 
தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும் 
புரட்டாசி விரதம் மாந்தரின்
மனதை பக்குவப்படுத்த உதவிடும் 
ஐப்பசி மழை அடை மழை 
ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும் 
கார்த்திகையில் இல்லம்தோரும் அகல்விளக்கு
ஒளிர்ந்திட நன்மைகள் குடி புகுந்திடும் 
மார்கழி குளிரில் வாசல்களில் கோலங்களும் 
வயல்களில் வசந்தங்களும் பூத்திருக்கும்

Posted in , , , | Leave a comment
Powered by Blogger.